போலீசார் தீவிர வாகன சோதனை


போலீசார் தீவிர வாகன சோதனை
x

பொட்டல்புதூரில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

தென்காசி

கடையம்:

தென்காசி மாவட்டம் மேலப்பாவூரில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் தென்காசி மாவட்ட எல்லைகளில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர சோதனைக்குப்பின் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று பொட்டல்புதூரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். பொட்டல்புதூர் மேற்கு பஸ் நிறுத்தத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக சோதனைச்சாவடியில் அந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி போலீசார் சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர்.


Next Story