ஆற்றங்கரையில் கிடந்த மனித எலும்புக்கூடு


ஆற்றங்கரையில் கிடந்த மனித எலும்புக்கூடு
x

பட்டுக்கோட்டை அருகே ஆற்றங்கரை ஓரம் மனித எலும்புக்கூடு கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை அருகே ஆற்றங்கரை ஓரம் மனித எலும்புக்கூடு கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

எலும்புக்கூடு

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த கார்காவயல் கிராமம் அருகில் மகாராஜசமுத்திரம் காட்டாறு உள்ளது. இந்த ஆற்றங்கரை ஓரத்தில் மண்டை ஓட்டுடன் மனித எலும்புக்கூடு கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் சரவணகுமார் பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பட்டுக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பிரிதிவிராஜ்சவுகான், இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று எலும்புக் கூட்டை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணை

மேலும் அங்கேயே டாக்டர்கள் மூலம் எலும்புக்கூட்டை பரிசோதிக்க முடிவு செய்தனர். அதன்படி டாக்டர் நியூட்டன் தலைமையிலான குழுவினர் எலும்புக்கூடை ஆய்வு செய்தனர். பின்னர் எலும்புக்கூட்டை போலீசார் கைப்பற்றி ரசாயன பரிசோதனைக்கு அனுப்ப உள்ளனர். அந்த எலும்புக்கூடு ஒரு பெண்ணுடையதாக இருக்கலாம் என்றும் 2 மாதத்திற்கு முன் இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து யாருடைய எலும்புக்கூடு? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆற்றங்கரையோரம் எலும்புக்கூடு கிடந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story