இரும்பு கடை உரிமையாளர் உடல் அழுகிய நிலையில் மீட்பு-போலீசார் விசாரணை


இரும்பு கடை உரிமையாளர் உடல் அழுகிய நிலையில் மீட்பு-போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

இரும்பு கடையில் அதன் உரிமையாளர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை

காளையார்கோவில்

காளையார்கோவில் அருகே மந்திக்கண்மாய் கிராமத்தை சேர்ந்தவர் ஜஸ்டின் திரவியம் (வயது 48). தி.மு.க. ஒன்றிய அவை தலைவரான இவர் காளையார் கோவில் கே.கே. நகர் எதிர்ப்புறம் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். நேற்று காலை பழைய இரும்பு வியாபாரிகள் விற்பனைக்காக அங்கு சென்றபோது கடையில் இருந்த அறையில் அழுகிய நிலையில் ஜஸ்டின் திரவியம் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக காளையார் கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அழுகிய நிலையில் அவரது உடல் இருந்ததால் சம்பவ இடத்திலேயே சிவகங்கை அரசு ஆஸ்பத்திரி மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை நடத்தினர். அப்போது ஜஸ்டின் திரவியம் இறந்து 4 நாட்கள் ஆனது தெரியவந்தது. இதுகுறித்து காளையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story