கோர்ட்டில் சரணடைந்த மேலும் 3 பேரை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை
கோர்ட்டில் சரணடைந்த மேலும் 3 பேரை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை செய்தனர்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள தென்பரங்குன்றத்தில் வசித்து வந்தவர் சுரேஷ் (வயது 39) கொத்தனார். இவர் கடந்த 1-ந்தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தென்பரங்குன்றத்தை சேர்ந்த தீனா, இவரது நண்பர்கள் விக்னேஸ்வரன், சிங்கராஜா ஆகிய 3 பேரை தேடி வந்தனர். இதையடுத்து அவர்கள் கடந்த 3-ந்தேதி திண்டுக்கல் கோர்ட்டில் சரணடைந்தனர். இதற்கிடையில் திருப்பரங்குன்றம் போலீசார், கோர்ட்டில் சரணடைந்த 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து மேல் விசாரணை செய்தனர். பிறகு அவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இதே கொலை வழக்கில் புதுக்கோட்டை கோர்ட்டில் திருப்பரங்குன்றம் தமிழரசன் (25), திருநகர் சிவபிரியன் (28), மதுரை தத்தனேரி மதன் (29) ஆகியோர் சரணடைந்தனர். இந்த 3 பேரையும் போலீசார் காவலில் எடுத்து மேல் விசாரணை செய்தனர்.