வேளாங்கண்ணி அருகே கருவேல மரக்காட்டில் தூக்கில் ஆண் பிணம்
வேளாங்கண்ணியில் கருவேலமரக்காட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவர் பிணமாக தொங்கினார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேளாங்கண்ணியில் கருவேலமரக்காட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவர் பிணமாக தொங்கினார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூக்கில் பிணம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரியநாட்டுத்தெரு அருகே கருவேல மரக்காட்டில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
கொலையா? விசாரணை
முதல் கட்ட விசாரணையில் தூக்கில் பிணமாக தொங்கியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றி தெரியவரவில்லை.
அவர் எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.