மாணவி படித்த பள்ளியில் போலீசார் விசாரணை


மாணவி படித்த பள்ளியில் போலீசார் விசாரணை
x

சிவகாசியில் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மாணவி படித்த பள்ளியில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசியில் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மாணவி படித்த பள்ளியில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பிளஸ்-1 மாணவி

சிவகாசி அருகே உள்ள அய்யம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பட்டாசு தொழிலாளி கண்ணன். இவரது மகள் யோகலட்சுமி (வயது 17). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் சில மணி நேரம் கழித்து வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்த நிலையில் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் உடலை இறக்கினர்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாரனேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மாணவியின் குடும்பம், நண்பர்களிடம் விசாரணை நடத்தினர். மாணவி படித்த பள்ளிக்கு சென்று போலீசார் மாணவியின் மரணம் குறித்து விசாரித்தனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மாணவிக்கு வயிற்று வலி பிரச்சினை இருந்ததால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த தற்கொலை விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story