பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய என்ஜினீயரிங் மாணவருக்கு போலீஸ் வலைவீச்சு


பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய என்ஜினீயரிங் மாணவருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 7 Oct 2022 12:15 AM IST (Updated: 7 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய என்ஜினீயரிங் மாணவருக்கு போலீஸ் வலைவீச்சு

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

சின்னசேலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று அதே கிராமத்தில் உள்ள வயலில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த 19-வயது என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர் புல் கட்டுகளை தலையில் தூக்கி விட மாணவியை உதவிக்கு அழைத்தார். உடனே மாணவி அருகில் வந்ததும் அவரை மாணவர் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். ஆனால் இந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லாமல் சோர்வுடன் இருந்து வந்த மாணவி திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது மாணவி கர்ப்பமாக இருப்பது தொியவந்தது. இது குறித்து மாணவி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மாணவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகிறார்.


Next Story