மலைப்பகுதியில் போலீசார் சாராய வேட்டை


மலைப்பகுதியில் போலீசார் சாராய வேட்டை
x

ஆரணி அருகே மலைப்பகுதியில் போலீசார் சாராய வேட்டை நடத்தினர். அப்போது சாராய வியாபாரிகள் தப்பி ஓடிவிட்டனர்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணியை அடுத்த பூசிமலைக்குப்பம் மலை மீது வினோத முறையில் கயிறு கட்டி சாராயம் விற்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயனுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார், ஆயுதப்படை போலீசார், தனிப்படை போலீசார், மற்றும் போலீசார் என 50-க்கும் மேற்பட்டவர்கள் பூசிமலைக்குப்பம் கிராம மலை பகுதியில் சாராய வேட்டை நடத்தினர்.

போலீசாரை பார்த்தவுடன் சாராய வியாபாரிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

பின்னா் அங்கிருந்த சுமார் 300 சாராய பாக்கெட், 250 லிட்டர் சாராயம், 5 லாரி டியூப்கள் மற்றும் மலையிலிருந்து கீழே சாராய பாக்கெட் இறக்கப்பட்ட இரும்பு கம்பிகள் உள்ளிட்டவைகளை சம்பவ இடத்திலேயே போலீசார் அழித்தனர். .

தொடர்ந்து அப்பகுதியை சுற்றிலும் உள்ள மலைப் பகுதிகளிலும், காட்டுப்பகுதியிலும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story