பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் அதிகாரிகள் ஆய்வு


பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 27 Feb 2023 12:15 AM IST (Updated: 27 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யேஸ்வரர் கோவிலில் 3-ந்தேதி நடைபெறும் தேர் திருவிழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசி மகப் பெருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா வருகிற 3-ந்தேதி(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். விழாவிற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். தேர் திருவிழாவுக்காக பாதுகாப்பு ஏற்பாடுகளை நாகை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன் தலைமையில் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் மற்றும் போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் ேதர் செல்லும் நான்கு வீதிகளிலும் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேர் சீர் செய்யும் பணியினையும் பார்வையிட்டனர். பின்னர் கோவில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். தேர் திருவிழாவில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story