மயிலாடுதுறையில் போலீசார் அணிவகுப்பு ஊர்வலம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மயிலாடுதுறையில் போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
மயிலாடுதுறை:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மயிலாடுதுறையில் போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
விநாயகர் சதுர்த்தி
தமிழகத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வருகிற 31-ந்தேதி(புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தி மறுநாள் ஊர்வலமாக எடுத்துச்சென்று துலாக்கட்ட பகுதி காவிரி ஆற்றில் கரைப்பது வழக்கம்.
அணிவகுப்பு ஊர்வலம்
இந்த ஆண்டு மயிலாடுதுறையில் விநாயகர் சதுர்த்தி விழா எந்தவித அசம்பாவிதமும் இன்றி நடைபெற மயிலாடுதுறை போலீசார் நேற்று அணிவகுப்பு நடத்தினர். இந்த அணிவகுப்புக்கு மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமை தாங்கினார்.இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் கிட்டப்பா அங்காடியில் இருந்து புறப்பட்டு காந்திஜி ரோடு, பட்டமங்கலத் தெரு வழியாக சென்று காவிரி துலாகட்டத்தில் முடிவடைந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்துகொண்டனர்.