இன்று 75-வது சுதந்திர தின விழா: போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பார்வையிட்டார்


இன்று 75-வது சுதந்திர தின விழா:    போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை    போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பார்வையிட்டார்
x

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று நடந்த போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகையை போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பார்வையிட்டார்.

கடலூர்

கலெக்டர் கொடி ஏற்றுகிறார்

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நாளை (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் நாளை காலை 9.05 மணி அளவில் சுதந்திர தின விழா நடக்கிறது. இவ்விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, தேசிய கொடி ஏற்றுகிறார்.பின்னர் அவர் திறந்தவெளி ஜீப்பில் சென்றபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். இதையடுத்து சிறப்பாக பணிபுரிந்த போலீஸ்காரர்களுக்கு பதக்கமும், அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்குகிறார்.

போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்டார்

இந்நிலையில் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளில் அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போலீசாரும் அண்ணா விளையாட்டு மைதானம் முழுவதும் நேற்று மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர்.இதற்கிடையே இன்று காலை போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடந்தது. இதில் துப்பாக்கி ஏந்தியபடி போலீசார் அணிவகுப்பில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ஒத்திகை நடத்தப்பட்டது. அதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் பார்வையிட்டார்.

பாதுகாப்பு

இந்த நிலையில் சுதந்திர தின விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மேற்பார்வையில் 7 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் மாவட்டம் முழுவதும் சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கோவில்கள், ரெயில் மற்றும் பஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story