கடையநல்லூரில் போலீசார் குவிப்பு
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிப்பு எதிரொலியாக கடையநல்லூரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி
கடையநல்லூர்:
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் தலைமையில் கடையநல்லூர் முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளுக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம், அட்டைகுளம், மேல கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் கடையநல்லூர் நகருக்குள் நுழையும் அனைத்து இடங்களிலும் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். வெளியூரில் இருந்து கடையநல்லூர் வரும் அனைத்து வாகனங்களையும், அதன் பதிவு எண்களை பதிவு செய்து செய்துவிட்டு சோதனை செய்து அனுப்பினர்.
Related Tags :
Next Story