ஹெல்மெட் வழங்கி போலீசார் விழிப்புணர்வு


ஹெல்மெட் வழங்கி போலீசார் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 14 Nov 2022 12:15 AM IST (Updated: 14 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேவர்சோலையில் ஹெல்மெட் வழங்கி போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர் தாலுகா தேவர்சோலையில் போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் முறையாக பின்பற்ற கோரி போலீசார் மற்றும் தன்னார்வ அமைப்பினர் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார் தலைமை தாங்கினார். தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வரும் நபர்களை பிடித்தனர். தொடர்ந்து குறைந்த விலைக்கு வழங்கி ஹெல்மெட் அணிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் வரும் நாட்களில் விதிமுறைகளை பின்பற்றவில்லை எனில் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தனர். இதுபோல் ஏராளமானவர்களை பிடித்து அறிவுறுத்தினர். இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி உள்ளிட்ட போலீசார் மற்றும் தன்னார்வ அமைப்பினர் கலந்துகொண்டனர்.



Next Story