போலீஸ்- பொதுமக்களுக்கு இடையே நல்லுறவு நிகழ்ச்சி
போலீஸ்- பொதுமக்களுக்கு இடையே நல்லுறவு நிகழ்ச்சி நடந்தது.
குளித்தலை போலீஸ் நிலையம் சார்பாக போலீஸ்-பொதுமக்கள் இடையே நல்லுறவு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நெய்தலூர் காலனி அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு கரூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி காவல் கண்காணிப்பாளர் குமார் தலைமை தாங்கினார். குளித்தலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரூபினி முன்னிலை வகித்தார். நெய்தலூர் காலனி பகுதி இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம், உடல் பயிற்சி உபகரணங்கள் வழங்கினால் காவல்துறைக்கும், ராணுவத்தில் சேர்வதற்கு உதவியாக இருக்கும். பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் தற்போது உள்ள சூழ்நிலையில் கவன சிதைவால் செல் போனில் பேசுவது, பள்ளி முடிந்து கூட்டம் கூடி தேவையில்லாமல் பேசுவதை தடுக்க பயிற்சி மற்றும் அறிவுரைகள் கூற வேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை பொதுமக்கள் எடுத்து கூறினர். இதில் குளித்தலை போலீசார், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.