போலீசாரிடம் குறைகளை கேட்ட டி.ஐ.ஜி.


போலீசாரிடம் குறைகளை கேட்ட டி.ஐ.ஜி.
x

போலீசாரிடம் குறைகளை கேட்ட டி.ஐ.ஜி.

திருப்பூர்

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி நேற்றுஆய்வு செய்து போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார். சிறப்பாக பணியாற்றிய போலீசாரை பாராட்டி கவுரவித்தார்.

போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு

கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி நேற்று திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பெருங்குற்றங்கள் தொடர்பாக ஆய்வு நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உடனிருந்தார்.

அவினாசி, பல்லடம், உடுமலை, தாராபுரம், காங்கயம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகளுடன் கலந்தாலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜான்சன், சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்றார்கள்.

குறைகளை கேட்டார்

குற்ற செயல்கள் தடுப்பது தொடர்பாக அறிவுரை வழங்கினார். கடந்த காலத்தில் அவினாசியில் 21 கிலோ கஞ்சா கைப்பற்றியது, கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை 24 மணி நேரத்தில் கைது செய்தது, காங்கயத்தில் காணாமல் போன ரூ.10 லட்சம் மதிப்புள்ள லாரிகளை கண்டுபிடித்தது, ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட முயன்றவர்களை கைது செய்தது போன்ற பெருங்குற்றங்களில் ஈடுபட்டவர்களை விரைவில் கைது செய்து சிறப்பாக பணியாற்றிய துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 9 இன்ஸ்பெக்டர்கள், 12 சப்-இன்ஸ்பெக்டர்கள், 22 போலீஸ்காரர்கள் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி டி.ஐ.ஜி.முத்துசாமி கவுரவித்தார். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார்.பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்திலும் போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு மேற்கொண்டார். அப்போது வழக்குகள் குறித்த விவரங்களை போலீசாரிடம் கேட்டறிந்தார். மேலும் கோப்புகளையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அவினாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பால்ராஜ், பெருமாநல்லூர் இன்ஸ்பெக்டர் ஹேமலதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story