திருவண்ணாமலையில் முக்கிய இடங்களில் போலீசார் சோதனை
கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து திருவண்ணாமலையில் முக்கிய இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
கோவை நகரில் கார் ஒன்று வெடித்து சிதறியது. அதைத் தொடர்ந்து திருவண்ணாமலை ரெயில் நிலையம், மத்திய பஸ் நிலையம், அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் கூட்டம் அதிகமாக கூடும் இடங்களில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
வெளி பகுதிகளில் இருந்து இனிப்பு, பட்டாசு உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு நகருக்கு அதிக அளவில் வருவார்கள் என்பதால் போலீசார் கண்காணிப்பை தீவிர படுத்தியுள்ளனர். மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களையும் தீவிர பரிசோதனைக்கு பின்பு கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதான நான்கு கோபுர நுழைவு வாயில்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாவட்ட எல்லை பகுதிகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.