அரிசி ஆலைகளில் போலீசார் திடீர் ஆய்வு


அரிசி ஆலைகளில் போலீசார் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 21 Jun 2023 12:15 AM IST (Updated: 21 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அரிசி ஆலைகளில் போலீசார் திடீர் ஆய்வு

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகின்றன. அதேசமயம் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அரிசி ஆலைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து கடத்தப்படுகிறதா? என்பது குறித்து நெல்லை மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துக்குமார் தலைமையில், குமரி மாவட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கலா மற்றும் போலீசார் நேற்று நாகர்கோவில், ஆரல்வாய்மொழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 4 அரிசி ஆலைகளில் ஆய்வு செய்தனர். அப்போது அரிசி ஆலைகளில் உள்ள பதிவேடுகளில் இருக்கும் சப்ளை மற்றும் இருப்பு விவரங்கள் ஆகியவற்றை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் அங்குள்ள அரிசி மூடைகளையும் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து அரிசி ஆலை உரிமையாளர்களிடம் போலீசார் அறிவுரைகள் வழங்கினர்.


Next Story