ரெயில் நிலையங்களில் போலீசார் சோதனை


ரெயில் நிலையங்களில் போலீசார் சோதனை
x

ஸ்ரீவில்லிபுத்தூரில் ரெயில் நிலையங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீ ராமு தலைமையில் ெரயில்வே போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த ெரயில்களில் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் தண்டவாளம் பகுதிகளில் மோப்ப நாய்கள் மூலம் சோனை செய்தனர். அதேபோல விருதுநகர் ரெயில் நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடைமைகளை ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் சோதனை செய்தனர்.


Next Story