ெரயில் நிலையத்தில் போலீசார் சோதனை
திருச்சுழி ெரயில் நிலையத்தில் போலீசார் சோதனை செய்தனர்.
விருதுநகர்
திருச்சுழி,
திருச்சுழி ெரயில் நிலையத்தில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் தீயணைப்புத்துறையினர் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வெடிகுண்டு தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் அடங்கிய குழுவினர் திருச்சுழி ரெயில் நிலையத்தில் தண்டவாள பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் திருச்சுழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story