ரெயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்வதை தடுக்க போலீசார் சோதனை


ரெயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்வதை தடுக்க போலீசார் சோதனை
x

ரெயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்வதை தடுக்க போலீசார் சோதனை நடத்தினர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டைரெயில்நிலையத்தில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து ரெயில்களில் வெடி பொருட்கள் மற்றும் பட்டாசுகளை எடுத்து செல்வதை தவிர்க்கும் வகையில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, சப்- இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் ரெயில்வே பாதுகாப்புப் படை சப்- இன்ஸ்பெக்டர் டிஜித், குமரேசன், அசோக் உள்ளிட்ட பாதுகாப்பு படை போலீசார் நேற்று ரெயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ரெயில் பயணிகளிடம் தீபாவளியையொட்டி பட்டாசுகள் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளதால் பட்டாசு உள்ளிட்ட வெடிபொருட்களை கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், பட்டாசு பொருட்களை கொண்டு சென்றால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ரெயில்வே போலீசார் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, எச்சரித்தனர்.


Next Story