திருப்பூர் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு


திருப்பூர் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
திருப்பூர்

திருப்பூர்,

ராணுதிருப்பூர் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பீகாரில் ரெயில்களை தீ வைத்து கொளுத்தினார்கள். ரெயில்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

அதுபோல் ரெயில் மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். வடமாநிலங்களில் அதிகரித்து வந்த நிலையில் தற்போது தென்மாநிலங்களிலும் இந்த போராட்டம் பரவ தொடங்கியிருக்கிறது.

இதைத்தொடர்ந்து திருப்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று காலை முதல் போலீசார் குவிக்கப்பட்டனர். பனியன் தொழில் நகரான திருப்பூரில் வெளிமாநில மக்கள், குறிப்பாக வடமாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் தங்கி பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் பீகார், ஒடிசா, உத்தரபிரதேசம் பகுதிகளை சேர்ந்தவர்கள். வடமாநிலங்களில் ரெயில் மீது தாக்குதல் சம்பவம் நடந்து வரும் நிலையில் திருப்பூரிலும் அதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருப்பூர் கொங்குநகர் போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் தலைமையில் வடக்கு போலீசார் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். மேலும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், ரெயில்வே போலீசாரும் பாதுகாப்பு பணியில் இணைந்தனர். ரெயில் நிலைய நுழைவுவாயில்களில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு ஒவ்வொருவராக உள்ளே செல்லும் வகையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பயணிகள் உடைமைகளை போலீசார் தீவிர சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கிறார்கள். அதுபோல் ரெயிலில் இருந்து திருப்பூர் வரும் வடமாநில தொழிலாளர்களையும் சோதனை செய்து அனுப்பிவைக்கிறார்கள். ரெயில் நிலையம் உள்புறமும் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story