ஆன்லைன் மூலம் இழந்த ரூ.50 ஆயிரத்தை போலீசார் மீட்டு கொடுத்தனர்


ஆன்லைன் மூலம் இழந்த ரூ.50 ஆயிரத்தை போலீசார் மீட்டு கொடுத்தனர்
x

ஆன்லைன் மோடியில் பணத்தை இழந்தவருக்கு ரூ.50 ஆயிரத்தை போலீசார் மீட்டு கொடுத்தனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

ஆன்லைன் மோடியில் பணத்தை இழந்தவருக்கு ரூ.50 ஆயிரத்தை போலீசார் மீட்டு கொடுத்தனர்.

ஜோலார்பேட்டை வக்கணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் குட்டுலா ராமா நந்தகுமார். இவர் தனியார் வாடகை கார் நிறுவனத்தின் தொடர்பு எண்ணை கூகுள் வலைதளத்தில் தேடி, அதில் உள்ள எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அப்போது அதில் பேசிய நபர் எனிடெஸ்க் எனும் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறியுள்ளார். அதனை அவர் பதிவிறக்கம் செய்தபோது, அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர் எடுத்தது தெரிந்தது.

இதுகுறித்து குட்டுலா ராமா நந்தகுமார் திருப்பத்தூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து மோசடி நபரின் வங்கிக்கணக்கை முடக்கி ரூ.50 ஆயிரத்தை மீட்டனர்.

அதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கி.பாலகிருஷ்ணன் முன்னிலையில் குட்டுலா ராமா நந்தகுமாரின் வங்கிக்கணக்கில் அவரது பணம் வரவு வைக்கப்பட்டதற்கான ஆவணம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story