காவல்துறை ஓய்வுபெற்ற அலுவலர் நல சங்க பொதுக்குழு கூட்டம்


காவல்துறை ஓய்வுபெற்ற அலுவலர் நல சங்க பொதுக்குழு கூட்டம்
x

காவல்துறை ஓய்வுபெற்ற அலுவலர் நல சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது

கரூர்

கரூர் மாவட்ட காவல்துறை ஓய்வுபெற்ற அலுவலர் நல சங்கம் சார்பில் இந்திய ஓய்வூதியர்கள் தினவிழா, காவல்துறை ஓய்வூதியர்கள் தினவிழா பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட டி.ஏ. மற்றும் நிலுவைத்தொகையினை மாநில அரசும் வழங்கிட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு தகுதி அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும். ராணுவத்திற்கு கொடுப்பது போல் 5 சென்ட் நிலம் கொடுக்க வேண்டும். காவலர் முதல் ஆய்வாளர் வரை சீனியாரிட்டிப்படி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கரூர் மனோகரா கார்னரில் இருந்து பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற மண்டபம் வரை கரூர் மாவட்ட காவல்துறை ஓய்வுபெற்ற அலுவலர் நல சங்கத்தினர் ஊர்வலமாக வந்தனர்.


Next Story