பா.ஜ.க., இந்து முன்னணி நிர்வாகிகள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு


பா.ஜ.க., இந்து முன்னணி நிர்வாகிகள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
x

திருப்பத்தூரில் பா.ஜ.க., இந்து முன்னணி நிர்வாகிகள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி பலரை கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மதுரை, கோவை பகுதிகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. இதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் தொடர்ந்து மூன்று நாட்களாக பா.ஜ.க. அலுவலகம் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர், பா.ஜ.க. முக்கிய பிரமுகர்கள் வீடுகள், கோவில், மசூதி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரவு நேரங்களில் தொடர்ந்து விடிய விடிய வாகன சோதனைகள் நடைபெற்றது. பெட்ரோல் பங்க்குகளில் பாட்டில் மற்றும் கேண்களில் பெட்ரோல் விற்பனை செய்ய போலீசார் தடை விதித்துள்ளனர்.


Next Story