ரயில் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு


ரயில் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு
x

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

மயிலாடுதுறை

இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வடமாநிலங்களில் ரயில் நிலையங்கள் உள்பட பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகின்றன. அந்தவகையில் மயிலாடுதுறையில் பிரதமர் உருவபொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்தநிலையில், மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் அசம்பாவிதங்களை தடுக்கும்பொருட்டு திருச்சியிலிருந்த ரயில்வே பாதுகாப்புபடை சிறப்பு பிரிவு போலீசார் மயிலாடுதுறை ரெயில் நிலையம் வந்தனர். அவர்கள் யில்வே இருப்புப் பாதை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதீர்குமார் தலைமையில் சுழற்சிமுறையில் 24 மணி நேரமும் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக அவர்கள் ரயில் பயணிகள் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் அணிவகுப்பு நடத்தினர். தற்போது மயிலாடுதுறை ரயில் நிலையம் ரயில்வே பாதுகாப்பு படையினரின் தீவிர கண்காணிப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






Next Story