வாகனம் ஓட்டுவதில் பொதுமக்களுக்கு போலீசார் முன் உதாரணமாக இருக்க வேண்டும்- போலீஸ் சூப்பிரண்டு
வாகனம் ஓட்டுவதில் பொதுமக்களுக்கு போலீசார் முன் உதாரணமாக இருக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஸ் சிங் அறிவுறுத்தினார்.
வாகனம் ஓட்டுவதில் பொதுமக்களுக்கு போலீசார் முன் உதாரணமாக இருக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஸ் சிங் அறிவுறுத்தினார்.
வாகனங்கள் ஆய்வு
நாகை மாவட்ட போலீஸ் துறையில் உள்ள வாகனங்கள் ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி நாகை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று வாகனங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஸ் சிங் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும். சாலைகளில் விபத்தில் சிக்குபவர்களுக்கு உடனடியாக உதவி செய்ய வேண்டும். கடத்தலை தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அவர் போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார்.
அப்போது போலீஸ் துறையை சேர்ந்த வாகன ஓட்டுனர்களிடம் வாகனங்களில் உள்ள குறைபாடுகளை கேட்டறிந்த அவர், குறைபாடு உள்ள வாகனங்களை உடனடியாக பழுதுநீக்க சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
முன்மாதிரியாக இருக்க வேண்டும்
மேலும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியவேண்டும். வாகனம் ஓட்டுவதில் பொது மக்களுக்கு போலீசார் முன்மாதிரியாக இருக்க வேண்டும். சாலை விதிகளை பின்பற்றி விபத்து ஏற்படாமல் வாகனம் ஓட்ட வேண்டும் என கூறினார்.