போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி எழுத்து தேர்வு வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி எழுத்து தேர்வு வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு
x

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு இன்றும்(சனிக்கிழமை), நாளையும்(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 2022-ம் ஆண்டிற்கான நேரடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு இன்றும் (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் எழுத்து தேர்வு நடக்கிறது.

இந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத் தேர்வர்களுக்கு, தூத்துக்குடியில் 7 மையங்களில் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கான வினாத்தாள் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தூத்துக்குடி மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டன.

வினாத்தாள் அறைக்கு பாதுகாப்பு

அந்த வினாத்தாள் பெட்டிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அந்த வினாத்தாள்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பான அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டன. அந்த அறை முன்பு போலீஸ் ஏட்டு ஒருவர் தலைமையில் 4 ஆயுதம் தாங்கிய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள அறையை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தபோது, துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) கணேஷ்குமார், மாவட்ட போலீஸ் துறை அலுவலக அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரி ஆறுமுகம் மற்றும் போலீசார், அமைச்சுப்பணி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story