போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்


தினத்தந்தி 11 Oct 2022 12:15 AM IST (Updated: 11 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

உடன்குடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுவிற்பனை

குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி மற்றும் போலீசார் உடன்குடி வாரச்சந்தை பகுதியில் ரோந்து சென்றனர்.

அந்த பகுதியில் உடன்குடி கீழ புதுத் தெருவைச் சேர்ந்த ஜயப்பன் மகன் பாலாஜி (வயது 33) என்பவர் தமிழக அரசின் தடை உத்தரவை மீறி அரசு அனுமதி இல்லாமல் மது விற்றுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலைமிரட்டல்

சப்-இன்ஸ்பெக்டரும், போலீசாரும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 635 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் ஏற்கனவே மது விற்ற வகையில் வைத்திருந்த ரூ.6 ஆயிரத்து 750-ஐயும் பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் சப்-இன்ஸ்பெக்டருக்கும், போலீசாருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததுடன், ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது ெசய்தனர். அவருக்கு மதுபாட்டில்கள் கிடைத்தது எப்படி? வேறு எங்கும் அவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்துள்ளாரா? என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story