ஏ.டி.எம்.மையம் கொள்ளை சம்பவத்தில் 2 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை
ஏ.டி.எம்.மையத்தில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கலசபாக்கம் கோர்ட்டு அனுமதி வழங்கியது.
திருவண்ணாமலை
கலசபாக்கம், ஏப்.12-
ஏ.டி.எம்.மையத்தில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கலசபாக்கம் கோர்ட்டு அனுமதி வழங்கியது.
திருவண்ணாமலை, போளூர், கலசபாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம். மையங்களில் மர்ம நபர்கள் வெல்டிங் எந்திரத்தின் மூலம் வெட்டி அதிலிருந்த ரூ.72 லட்சத்து 78 ஆயிரத்து 600-ஐ கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அரியானா மாநிலத்தை சேர்ந்த அப்ரிடி (வயது 36), ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிராஜ்கான் (50) ஆகிய 2 பேரை நேற்று கலசபாக்கம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது இருவரையும் ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது. அதன்பேரில் 2 பேரையும் போலீசார் தங்கள் காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story