தர்மபுரியில் போலீசார் வீரவணக்க நாள் அனுசரிப்பு
பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு தர்மபுரியில் போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில் 63 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
வீரவணக்க நாள்
நாடு முழுவதும் போலீசார் வீரவணக்க நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மரணமடைந்த 264 போலீசாருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி மாவட்டங்கள் தோறும் போலீசாரால் கடைபிடிக்கப்பட்டது. அதன்படி தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில், பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு வீர வணக்கம் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமை தாங்கி அங்குள்ள நினைவுத்தூணில் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
63 குண்டுகள் முழங்க அஞ்சலி
இதைத்தொடர்ந்து63 குண்டுகள் முழங்க பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு வீரவணக்க நாள் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாமலை, இளங்கோவன், துணை போலிஸ் சூப்பிரண்டுகள் நாகலிங்கம், ராஜா சோமசுந்தரம், ரவிக்குமார், பெனாசீர் பாத்திமா, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நவாஸ், வெங்கடாசலம் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.