போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை


போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
x

ஜெயங்கொண்டம் அருகே போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் அவரது 2 பெண் குழந்தைகள் தவிக்கின்றனர்.

அரியலூர்

போலீஸ்காரர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்துள்ள தொட்டிக்குளம் கிராமத்தை சேர்ந்த சின்னதுரை மகன் பாலாஜி(வயது 37). அரியலூரில் கலால் பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ேமலும் இவர் அதற்காக சிகிச்சையும் பெற்று வருகிறாராம்.

இந்த நிலையில் நேற்று முதல் விடுப்பு எடுத்து வீட்டிலேயே இருந்துள்ளார். இதையடுத்து நேற்று தனது வீட்டில் இருந்து அருகில் உள்ள தாத்தா வீட்டிற்கு சென்ற பாலாஜி, வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் அறையில் இருந்து பாலாஜி வெளிய வராததால் அறைக்கு சென்று அவரது உறவினர்கள் பார்த்துள்ளனர்.

தூகிட்டு தற்கொலை

அப்போது அறையில் பாலாஜி தூக்கிட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட பாலாஜிக்கு சுதா என்ற மனைவியும், அனன்யா(7) இளவேனி(3) என 2 மகள்கள் உள்ளனர். கலால் போலீசார் தூக்கிட்டு இருந்த சம்பவம் தொட்டிக்குளம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story