தேரோட்டத்தில் போலீஸ்காரர் காயம்
தேரோட்டத்தில் போலீஸ்காரர் காயம் ஏற்பட்டது.
மதுரை
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. தேர்வலம் வரும்போது தேரின் இரும்புசக்கரங்கள் சற்றுவிலகும்போது அடுத்த நிமிடத்தில ்சக்கரங்களுக்கு அடியில் தடுப்புகட்டை போட்டு நிறுத்துவார்கள். இந்த நிலையில் தேரின் சக்கரங்களின் பக்கவாட்டின் இருபுறமும் கயிற்றை பிடித்தவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். மலைக்கு பின்புறம் தேரின் சக்கரத்தில் வழக்கப்படி தடுப்பு கட்டை போடப்பட்டது அதில் தடுமாறி கட்டை விழுந்ததால் ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார்.இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனே காயமடைந்த போலீஸ்காரருக்கு முதலுதவி செய்யப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரித்தனர்.
Related Tags :
Next Story