மோட்டார் சைக்கிள் விபத்தில் போலீஸ்காரர் சாவு


மோட்டார் சைக்கிள் விபத்தில் போலீஸ்காரர் சாவு
x

தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் போலீஸ்காரர் பரிதாபமாக பலியானார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் காளியப்பன். இவருடைய மகன் இசக்கிமுத்துராஜா (வயது 31). இவர் ராஜபாளையம் பட்டாலியனில் போலீசாக பணியாற்றினார். இவர் கீழ செக்காரக்குடி-கே.பி.தளவாய்புரம் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தாராம். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த இசக்கிமுத்துராஜா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் தட்டப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story