ரூ.1½ கோடிக்கு சொத்து வாங்கி குவித்த போலீஸ்காரர்: லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு
மனைவி பெயரில் ரூ.1½ கோடிக்கு சொத்து வாங்கி குவித்த போலீஸ்காரர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு.
சென்னை,
சென்னையில் மத்திய குற்றப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீஸ்காரராக வேலை பார்த்தவர் சவுந்திரராஜன். இவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை தனது மனைவி உமாதேவி பெயரில் ரூ.1.66 கோடிக்கு 4 இடங்களில் அசையா சொத்து வாங்கி குவித்துள்ளதாக புகார் எழுந்தது.
இவர் வாங்கிய சொத்துகளின் மதிப்பு இவரது வருமானத்தை விட 750 சதவீதம் அதிகம் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. அதன்பேரில் சவுந்திரராஜன் மீதும், அவரது மனைவி உமாதேவி மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். போலீஸ்காரர் சவுந்திரராஜன் தற்போது பணியில் இருந்து கட்டாய ஓய்வு பெற்று விட்டார், என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story