போலீஸ்காரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை


போலீஸ்காரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
x

திருவண்ணாமலையில் போலீஸ்காரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை-போளூர் சாலை செட்டிகுள மேட்டு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 60), கலசபாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி உமாமகேஸ்வரி (48). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது. ஒரு மகள் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் உமாமகேஸ்வரிக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story