பாம்பு கடித்து பெண் போலீஸ்காரர் மகன் பலி
ஆம்பூர் அருகே பாம்பு கடித்து பெண் போலீஸ்காரரின் மகன் பலியானான்.
ஆம்பூர்
ஆம்பூர் அருகே பாம்பு கடித்து பெண் போலீஸ்காரரின் மகன் பலியானான்.
பாம்பு கடித்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பெரியவரிகம் பகுதியை சேர்ந்தவர் மேகநாதன். கூலி தொழிலாளி.
இவருடைய மனைவி விமலா. இவர் வேலூரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வருகிறார்.
இவர்களுக்கு 2 மகன்கள். அவர்களில் தர்ஷன் (வயது 6) சோமலாபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று தர்ஷன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது தர்ஷனை பாம்பு கடித்துள்ளது. அவனது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து, சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சிறுவன் பலி
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், தர்ஷன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் தர்ஷன் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.