அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
கோட்டூர் அருகே அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது
கோட்டூர்;
கோட்டூர் தெற்கு, வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் ஆதிச்சபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கழக அமைப்புச் செயலாளர் சிவா, ராஜமாணிக்கம், முன்னாள் எம்.பி. டாக்டர் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஜீவானந்தம் வரவேற்று பேசினார் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:- கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் எந்த குறையும் இன்றி இருந்தனர். தி.மு.க.வை வீழ்த்தும் ஒரே தலைவராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். இன்று சாதாரண வீட்டுப் பிள்ளைகள் கூட மடிக்கணினி வைத்திருக்கிறார்கள் என்றால் அது அம்மாவின் சாதனை. அ.தி.மு.க.வில் பிளவு இல்லை. 98 சதவீதம் பேர் ஒரே இடத்தில் இருக்கிறார்கள். மக்கள் நமக்கு ஆதரவை அளித்துக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் நம் கையில் ஆட்சியை தர இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில் மன்னார்குடி ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன், நகர செயலாளர் ஆர்.ஜி.குமார், கோட்டூர் ஒன்றிய அவைத் தலைவர்கள் வி. எம் சுப்பிரமணியன், எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோட்டூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ப.ராஜாசேட் நன்றி கூறினார்.