பாரதியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை; மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்பு


பாரதியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை; மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்பு
x

பாரதியார் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருநெல்வேலி

பாரதியார் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

உறுதிமொழி ஏற்பு

மகாகவி பாரதியார் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பாரதியார் படித்த நெல்லை ம.தி.தா. இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் அவர் படித்த வகுப்பறையில் அவரது சிலைக்கு மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றனர்.

நெல்லை சந்திப்பில் உள்ள பாரதியார் உருவச்சிலைக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பா.ஜனதா கட்சியினர் மாவட்ட பொதுச்செயலாளர் முத்துபலவேசம் தலைமையில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாரதியார் உலக பொதுச்சேவை நிதியத்தினர் தலைவர் அ.மரிய சூசை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பிராமணர் சங்கம்-நாம் தமிழர் கட்சி

அகில பாரத பிராமணர் சங்கத்தினர் தலைவர் குளத்து மணி தலைமையில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட செயலாளர் கண்ணன், தலைவர் ராஜசேகர் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாவட்ட செயலாளர் துரைப்பாண்டியன் தலைமையில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் கவிஞர் கிருஷி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

பாரதியார் நினைவு தினத்தையொட்டி, அவர் படித்த நெல்லை சந்திப்பு ம.தி.தா.இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளிக்கு அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையில் சென்றனர். அவர்கள், பாரதியார் படித்த வகுப்பறைக்கு சென்று பார்வையிட்டு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றனர்.

பின்னர் அங்கு நடந்த இலவச சைக்கிள் வழங்கும் விழாவிற்கு அப்துல்வகாப் எம்.எல்.ஏ தலைமை தாங்கி, மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். பின்னர் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பள்ளி செயலாளர் செல்லையா, நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மண்டல தலைவர்கள் பிரான்சிஸ், மகேஸ்வரி, தலைமை ஆசிரியர் உலகநாதன், ஆசிரியர்கள் சொக்கலிங்கம், ராமலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story