வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை


வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை
x

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளையொட்டி பாளையங்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

திருநெல்வேலி

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளையொட்டி பாளையங்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

வீரபாண்டிய கட்டபொம்மன்

சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழாவையொட்டி நேற்று பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் பொருளாளர் ராஜேஷ் முருகன், பொதுக்குழு உறுப்பினர்கள் சொக்கலிங்ககுமார், கவி பாண்டியன், பரணி இசக்கி, மாரியம்மாள், வக்கீல் அணி துணைத்தலைவர் மகேந்திரன், மாவட்ட மகளிர் அணி தலைவி ஸ்டெல்லா மேரி, மண்டல தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை மாவட்ட ராகுல் காந்தி பேரவை தலைவர் குப்புராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட விவசாய பிரிவு தலைவர் மாரியப்பன், மாவட்ட தொழில் சங்க தலைவர் ஸ்டீபன், மருத்துவ பிரிவு மாவட்ட செயலாளர் டாக்டர் சிவபாலன், வேணுகோபால், மருத்துவ பிரிவு மாவட்ட தலைவர் டாக்டர் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பா.ஜனதா

அ.ம.மு.க.வினர் நெல்லை தெற்கு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நெல்லை மாவட்ட பா.ஜனதா சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் மகாராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ம.தி.மு.க. வினர் மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நெல்லை மாவட்ட நாயுடு சமுதாய சங்க நிர்வாகிகள் செயலாளர் இசக்கிமுத்து நாயுடு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் பொருளாளர் கணேசன் நாயுடு, பாளையங்கோட்டை நாயுடு சங்க துணைத்தலைவர் கிருஷ்ணன், அவைத்தலைவர் அந்தோணிநாயுடு, செயலாளர் வெங்கட்ராஜ் நாயுடு உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்து மக்கள் கட்சியினர் மாவட்ட தலைவர் மாரியப்பன், தென்மண்டல தலைவர் ராஜா பாண்டியன் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்தனர்.


Next Story