அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
x

அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி நாகர்கோவில் அவருடைய உருவச் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி நாகர்கோவில் அவருடைய உருவச் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அம்பேத்கர் பிறந்தநாள்

அம்பேத்கர் பிறந்தநாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு அமைந்துள்ள அவரது முழு உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு

குமரி மாவட்ட தி.மு.க. சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மலை அணிவிக்கப்பட்டது. குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான மனோ தங்கராஜ், குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநகர செயலாளர் ஆனந்த், ஒன்றிய செயலாளர் மதியழகன், மாநகராட்சி மண்டல தலைவர் ஜவகர், வக்கீல் சதாசிவம், இளைஞர் அணி சிவராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள், தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணைத் தலைவர் இ.என்.சங்கர், மாவட்ட துணை செயலாளர் சோமு, ஒன்றிய கவுன்சிலர் அருண்காந்த், தி.மு.க. ஆதிதிராவிடர் அணி சார்பில் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தி.மு.க. மாநில தணிக்கைக்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜனும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அ.தி.மு.க.-பா.ஜனதா

அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பச்சைமால், அவைத்தலைவர் சேவியர் மனோகரன் ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் மாவட்ட துணைச்செயலாளர் சாந்தினி பகவதியப்பன், மாநகராட்சி கவுன்சிலர் அக்ஷயா கண்ணன், நிர்வாகிகள் கிருஷ்ணதாஸ், ராஜாராம், சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குமரி மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் எம்.ஆ.ர்.காந்தி எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் முத்துராமன் துணைத்தலைவர் தேவ், மாநகராட்சி கவுன்சிலர் அய்யப்பன், மண்டல் தலைவர்கள் சிவசீலன், வேணுகிருஷ்ணன், ராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ்-கம்யூனிஸ்டு

காங்கிரஸ் கட்சி சார்பில் விஜய்வசந்த் எம்.பி. அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி.உதயம், மாநகராட்சி மண்டல தலைவர் செல்வக்குமார், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாவட்டத் தலைவர் மணிகண்டன், காங்கிரஸ் மேற்கு மாவட்ட பொருளாளர் ஐ.ஜி.பி.லாரன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அந்தோணி, அகமது உசேன், கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மோகன், சசி, ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

விடுதலை சிறுத்தைகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளி முன்பிருந்து ஊர்வலமாக புறப்பட்டு அண்ணா விளையாட்டு அரங்கம் முன்புள்ள அம்பேத்கர் சிலைக்கு வந்தனர். அங்கு அம்பேத்கர் சிலைக்கு குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநில வக்கீல் அணி செயலாளர் பார்வேந்தன் முன்னிலை வகித்தார்.

இதில் மேற்கு மாவட்ட செயலாளர் மாத்தூர் ஜெயன், மாநிலச் செயலாளர் அல்காலித், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் பகலவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


Next Story