பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அரசியல் கட்சியினர் மரியாதை


பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அரசியல் கட்சியினர் மரியாதை
x

திண்டுக்கல்லில் பெரியார் சிலைக்கு, அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் மாலை அணிவித்தபோது எடுத்த படம்.


தினத்தந்தி 18 Sept 2022 12:30 AM IST (Updated: 18 Sept 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

பெரியார் பிறந்த நாளையொட்டி திண்டுக்கல்லில் அவருடைய சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திண்டுக்கல்

தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாள் நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன்படி திண்டுக்கல்லில் தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி திண்டுக்கல்லில் உள்ள அவருடைய சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் அ.தி.மு.க. சார்பில் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் மருதராஜ், ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர் கண்ணன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் பாரதிமுருகன், இளைஞர் அணி செயலாளர் வி.டி.ராஜன், பகுதி செயலாளர்கள் மோகன், சேசு, சுப்பிரமணி, முரளிதரன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க.வினர் மரியாதை

அதேபோல் தி.மு.க. சார்பில் காந்திராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் மாவட்ட துணை செயலாளர் நாகராஜன், மாநகர செயலாளரும் துணை மேயருமான ராஜப்பா, ஒன்றியக்குழு தலைவர் ராஜா, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், பகுதி செயலாளர்கள் ஜானகிராமன், சந்திரசேகர், ராஜேந்திரகுமார், மாநகராட்சி மண்டல தலைவர் ஜான்பீட்டர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதேபோல் திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் வீரபாண்டி மற்றும் நிர்வாகிகளும், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மாநில பிரசார குழு செயலாளர் துரை சம்பத் மற்றும் நிர்வாகிகளும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதுதவிர ம.தி.மு.க. சார்பில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதற்கிடையே தமிழர் சமூகநீதி கழகத்தினர் கருப்பு சட்டை அணிந்து குமரன் பூங்காவில் இருந்து ஊர்வலமாக வந்து, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். மேலும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம், பசும்பொன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

வேடசந்தூர்

தி.மு.க. சார்பில் வேடசந்தூர் பஸ் நிலையம் முன்பு பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன் தலைமை தாங்கி, பஸ் நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதாபார்த்திபன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சவுடீஸ்வரிகோவிந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் எரியோட்டில் நடந்த விழாவில் தி.மு.க. முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ஜீவா தலைமையில் பெரியார் உருவ படத்துக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய செயலாளர் வெற்றிச்செல்வன் தலைமையில் வேடசந்தூரில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

வத்தலக்குண்டு, பழனி

வத்தலக்குண்டுவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த விழாவில் நில மீட்பு பிரிவு மாநில துணை செயலாளர் உலகநம்பி தலைமையில் கட்சி நிர்வாகிகள் பெரியார் உருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தனர். குன்னுவரான் கோட்டை சமத்துவபுரத்தில் நடந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் முருகன் தலைமையில் நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பழனி ஆர்.எப். ரோட்டில் நடந்த விழாவில் தி.மு.க. நகர செயலாளர் வேலுமணி தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அ.தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதேபோல் விடுதலை சிறுத்தைகள், ஆதித்தமிழர் கட்சி உள்பட பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நிலக்கோட்டை, நத்தம்

நிலக்கோட்டை நால்ரோடு அருகே நடந்த விழாவில் தி.க. ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் பிறந்தநாள் விழா, பொதுக்கூட்டம் நடந்தது. நிலக்கோட்டை தி.மு.க. நகர செயலாளர் ஜோசப் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பெரியாரின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

நத்தம் பஸ்நிலையம் அருகில் நடந்த விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டிஅம்பலம், தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பெரியார் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.


Next Story