மொழிப்போர் தியாகி சாரங்கபாணி நினைவு தூணில் அரசியல் கட்சியினர் மரியாதை


மொழிப்போர் தியாகி சாரங்கபாணி நினைவு தூணில் அரசியல் கட்சியினர் மரியாதை
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:15:23+05:30)

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகி சாரங்கபாணி நினைவு தூணில் அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகி சாரங்கபாணி நினைவு தூணில் அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.

தி.மு.க.

மொழிப்போர் தியாகி நினைவு தினத்தையொட்டி மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரி வாயிலில் உள்ள மொழிப்போர் தியாகி சாரங்கபாணி நினைவு தூணில் தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சத்தியசீலன், ஜெகவீரபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க.

இதேபோல அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பவுன்ராஜ் தலைமையில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார், நகரசெயலாளர் செந்தமிழன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் மார்கோனி தலைமையில் மாநில துணை பொது செயலாளர் ஆடுதுறை முருகன் மலரஞ்சலி செலுத்தினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் மாவட்ட செயலாளர் கஜேந்திரன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேபோல் தி.க., திராவிடர் விடுதலைக் கழகம், நாம் தமிழர் கட்சி, திருக்குறள் பேரவை, தமிழர் தேசிய முன்னணி மற்றும் தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


Next Story