பா.ஜனதா பட்டியல் அணி செயற்குழு கூட்டம்
திருவாரூரில் மாவட்ட பா.ஜனதா பட்டியல் அணி செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கொரடாச்சேரி;
திருவாரூரில் மாவட்ட பா.ஜனதா பட்டியல் அணி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பட்டியல் அணி மாவட்ட தலைவர் மாதவன் தலைமை தாங்கினாா். மாவட்ட தலைவர் சா.பாஸ்கர், மாவட்ட பார்வையாளர் பேட்டை சிவா, மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில் அரசன், பட்டியல் அணி மாநில துணைத்தலைவர் சுரேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, மாவட்ட பொருளாளர் அட்சயாமுருகேசன், மாவட்ட துணைத்தலைவர் சதா சதீஷ், பட்டியல் அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பஞ்சமி நிலத்தை மீட்டு பட்டியல் இன மக்களுக்கு முழுமையாக வழங்கும் வகையில் பஞ்சமி நிலமீட்பு சட்டம் இயற்ற வேண்டும். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் சம்பவத்தில் தொடர்புடைய சமூக விரோதிகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் ஏலம் விடப்பட்ட நிலக்கரி சுரங்க ஒப்பந்தத்தை ரத்து செய்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பது, என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிைறவேற்றப்பட்டன.