பா. ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பா. ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

திருப்பூண்டியில் பா. ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி;

கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி கடைத்தெருவில் பா. ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் நேதாஜி, பொதுச் செயலாளர்கள் வைரமுத்து, பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வேதாரண்யம் அருகே உள்ள பன்னாள் ஊராட்சி பா. ஜனதா கட்சிதலைவர் இளையராஜா கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் குமார், பிற்படுத்தப்பட்டோர் மாவட்ட தலைவர் உமாபதி, மாவட்ட இளைஞரணி தலைவர் பாலாஜி, கீழையூர் ஒன்றிய தலைவர் இளமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story