தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

திருவாரூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்


மத்திய, மாநில அரசுகள் சமூக நீதியை பாதுகாக்க சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சீனிசெல்வம் தலைமை தாங்கினார். ஒன்றிய அமைப்பாளர்கள் ராஜேஷ், கண்ணன், மோகன், ரஞ்சித், ஒன்றிய விவசாய அணி நிர்வாகி பக்கிரிசாமி, ஒன்றிய இளைஞரணி நிர்வாகி சிவக்குமார், கிளை நிர்வாகி ராஜாராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர்.


Next Story