அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
திருவாரூர்
திருவாரூர்;
மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும். நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும். கனமழையால் பாதிக்கப்பட்ட குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் தலைமை தாங்கினார். இதில் கட்சி அமைப்பு செயலாளர் சீனிவாசன், மாநில தேர்தல் பிரிவு இணை செயலாளர் மலர்வேந்தன், தொழிற் சங்க இணை செயலாளர் சத்தியமூர்த்தி, வக்கீல் பிரிவு இணை செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நகர செயலாளர் பாண்டியன் வரவேற்றார். முடிவில் ஒன்றிய செயலாளர் திருமாறன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story