தஞ்சையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்து தஞ்சையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்;
மதுரை விமான நிலைய சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி தஞ்சை ரெயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் காந்தி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ராஜமாணிக்கம், கூட்டுறவு அச்சக தலைவர் புண்ணியமூர்த்தி, நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன், முன்னாள் நகர செயலாளர் பஞ்சாபிகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், பொய் வழக்கு பதிவு செய்த தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாவட்ட துணைத்தலைவர் பாலை.ரவி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் நாகராஜன், கவுன்சிலர்கள் கோபால், தெட்சிணாமூர்த்தி, ஒன்றிய செயலாளர் நாகத்தி கலியமூர்த்தி, விளார் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தம்பி என்ற சோம ரத்தினசுந்தரம், மகளிரணியை சேர்ந்த சித்ரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதைப்போல திருவையாறில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெத்தினசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.