வாக்குச்சாவடி முகவர்கள் நியமன ஆலோசனை கூட்டம்
பூம்புகார் சட்டசபை தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் நியமன ஆலோசனை கூட்டம் நடந்தது
குத்தாலம்:
பூம்புகார் சட்டசபை தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் நியமன ஆலோசனை கூட்டம் குத்தாலம் அருகே மங்கநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பூம்புகார் எம்.எல்.ஏ.வும், மயிலாடுதுறை தி.மு.க. மாவட்ட செயலாளருமான நிவேதா முருகன் தலைமை தாங்கினார்.ஒன்றிய செயலாளர்கள் ஏ.ஆர்.ராஜா, வைத்தியநாதன், அப்துல்மாலிக், அன்பழகன், விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குத்தாலம் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் வரவேற்றார்.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. மாநில இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் வாக்குச்சாவடி முகவர்கள் நியமன கடிதங்களை வழங்கி முகவர்கள் செயல்பாடுகள் குறித்து எடுத்துக் கூறினார். மேலும் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் உடன்பிறப்புகளாய் இணைவோம் என்ற திட்டம் குறித்தும் எடுத்துக் கூறினர். இதில் மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் உள்ளிட்ட தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.