போளூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்


போளூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
x

போளூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் சாந்தி பெருமாள் தலைமையில் நடந்தது.

திருவண்ணாமலை

போளூர்

போளூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் சாந்தி பெருமாள் தலைமையில் நடந்தது.

துணைத்தலைவர் மிஸ்சியம்மாள் முன்னிலை வகித்தார். ஆனணயாளர் பரணீதரன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கலசபாக்கம் தொகுதி பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் 2022-23-ம் ஆண்டிற்கு 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தில் வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் தேர்வு செய்து, நிர்வாக அனுமதி பெறும் பொருட்டு மன்ற அங்கீகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றியது.

இதில் ஒன்றிய பொறியாளர் படவேட்டான், உதவி பொறியாளர்கள் திவாகர், செல்வி, தனி வருவாய் ஆய்வாளர் பிரேம்நாத், ேதாட்டக்கலை அதிகாரி சுதாகர், உதவி மின் பொறியாளர் லட்சுமி, வட்டார கல்வி அதிகாரிகள் சுந்தர், நேரு, சுகாதார ஆய்வாளர் சரவணன், போக்குவரத்து அதிகாரி குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி அருள் நன்றி கூறினார்.


Next Story