'பப்ஸ்'க்குள் இருந்த பாலித்தீன் பை; கல்லூரி மாணவர் அதிர்ச்சி


பப்ஸ்க்குள் இருந்த பாலித்தீன் பை; கல்லூரி மாணவர் அதிர்ச்சி
x
தினத்தந்தி 26 Jun 2023 2:00 AM IST (Updated: 26 Jun 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூரில் ‘பப்ஸ்’க்குள் பாலித்தீன் பை இருந்ததை பார்த்த கல்லூரி மாணவர் அதிர்ச்சியடைந்தார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் சக்தி (வயது 20). கல்லூரி மாணவர். நேற்று முன்தினம் இவர், தனது நண்பருடன் வேடசந்தூரில், திண்டுக்கல் சாலையில் உள்ள பேக்கரி கடையில் 'பப்ஸ்' வாங்கினார். அந்த பப்சை சக்தி சாப்பிட்டார். அப்போது, அதற்கு பாலித்தீன் பை ஒன்று தென்பட்டது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக்தி, இதுகுறித்து பேக்கரி கடை உரிமையாளரிடம் தெரிவித்தார். ஆனால் அவர் முறையாக பதில் சொல்லாமல், அந்த பப்சை தூக்கி போடுங்கள், வேறு தருகிறேன் என்று கூறினார். இதனால் பப்ஸ்-ல் இருந்த பாலித்தீன் பை இருந்ததை வீடியோ எடுத்து, அதனை சமூக வலைதளங்களில் சக்தி பதிவிட்டார். தற்போது அந்த வீடியோ, வேடசந்தூர் பகுதியில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story